மூவரையும் விசே வெளுத்து வாங்கினாலும் திவ்யாவை A1 குற்றவாளியாக்கி விட்டு சாண்ட்ரா பேபியை (நன்றி பாரு) தப்பிக்க வைக்க விசே முயல்கிறாரோ என்கிற சந்தேகம் எழாமல் இல்லை.
வழக்கமாக நெருடலை ஏற்படுத்தும் விஜய்சேதுபதியின் ‘பிரம்பு வாத்தியார்’ அவதாரம், இந்த எபிசோடில் கச்சிதமாகப் பொருந்தியது.
ஏனெனில் சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் ஆகிய மூவரும் செய்த அநியாயமான சேட்டைகள் அப்படி. இந்த மூவர் மட்டுமே இந்த எபிசோடை முழுவதும் ஆக்ரமித்துக் கொண்டார்கள். க்ரைம் ரெக்கார்ட் அப்படி.
மூவரையும் விசே வெளுத்து வாங்கினாலும் திவ்யாவை A1 குற்றவாளியாக்கி விட்டு சாண்ட்ரா பேபியை (நன்றி பாரு) தப்பிக்க வைக்க விசே முயல்கிறாரோ என்கிற சந்தேகம் எழாமல் இல்லை.
“இன்னிக்கு நீங்க பார்க்காத படத்தை காட்டறோம். முன்ன எல்லாம் பொிய மனுஷங்க போராட்டம் பண்ணி ஜெயிலுக்குப் போவாங்க.
ஆனா இவங்களை ஜெயிலுக்கு அனுப்பறதே போராட்டமா ஆயிடுச்சு. வாங்க வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்க்கலாம்” என்றார் விசே. வழக்கமாக இந்த போர்ஷன் சுருக்கமாக முடிந்து விடும். ஆனால் இன்று சாண்ட்ரா+திவ்யா கூட்டணியின் அலப்பறை காரணமாக நீண்ட நேரத்திற்கு காட்டப்பட்டது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 48
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 48|22/11/2025
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? நாள் 47
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 47|21/11/2025

