தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராக திகழும் நாக சைதன்யா, முன்னணி நடிகர் நாகர்ஜுனாவின் மகனாகவும், தனித்தன்மை கொண்ட ஹீரோவாகவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு வெளியான அவரது ‘தண்டேல்’ திரைப்படம் சிறந்த பாராட்டைப் பெற்று வெற்றியடைந்தது. கடந்த ஆண்டு நடிகை சோபிதாவை திருமணம் செய்து கொண்ட அவர், தற்போது இருவரும் சினிமா பணிகளில் பிசியாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 154 கோடி என கூறப்படுகிறது. மேலும், ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிப்பதற்காக ரூ. 5 கோடி முதல் 10 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த விவரங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply