பொலன்னறுவை – ஹபரணை – மட்டக்களப்பு வீதியில் ஏற்பட்ட துயரகரமான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதசாரி கடவையை கடந்து சென்ற 60 வயதுடைய நபரை, அதிவேகமாக வந்த வேன் ஒன்று மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுமையாக காயமடைந்த அவர் உடனடியாக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், சிகிச்சையளித்தும் உயிர் தப்பவில்லை.
இந்நிலையில், சம்பவத்துக்கு காரணமான வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

