எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம், 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக மூன்று பெண்கள் உட்பட பத்து பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
ஒரு நபரை வெட்டிக்கொன்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீண்ட கால விசாரணைகளுக்குப் பிறகு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களுக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் குற்றவாளிகள் அனைவரும் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

