தமிழகத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சுசாந்திகா 12-ம் வகுப்பு இப்போது தான் முடித்துள்ளார். கர்நாடிக் சங்கீதம் பயின்ற இவர், முதல்முறை கலந்துகொண்ட நிகழ்ச்சியே சரிகமப நிகழ்ச்சிதான்.
ரியாலிட்டி ஷோ நடத்தும் டிவி சேனல்களில் ஒன்றாக ஜீ தமிழில் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்த சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி முடிவுக்கு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப்போ்டியில் சுசாந்திகா என்பவர் முதலிடம் பெற்றுள்ளார்.
தமிழ் டிவி சேனல்களில் அதிகம் நடைபெற்று வரும் ரியாலிட்டி ஷோக்கள் என்றால் அது பாடல் பாடுவது தான். பெயர்கள் வெவ்வேறு விதமாக இருந்தாலும், பாடல் பாடி நடுவர்களால் தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இதில் சீனியர், ஜூனியர் என இதே நிகழ்ச்சியை மாற்றியும் நடத்தி வருகிறார். அந்த வகையில் ஜீ தமிழில், ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சியாக சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீன் 5 கடந்த 6 மாதங்களாக ஒளிபரப்பாகி வந்தது,
இந்த சீசனின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் இந்த சீசனின் வெற்றியாளராக, சுசாந்திகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு, எம்.பி. டெவலப்பர்ஸ் சார்பில் 60 லட்சம் மதிப்பினா புதிய பிரம்மாண்ட வீடு பரிசாக வழங்கப்பட்டது.
மக்கள் வாக்குகள் அடிப்படையில் வெற்றி இரண்டாம் இடம் (முதல் ரன்னர் அப்) இலங்கையை சேர்ந்த சபேசன் 10 லட்சம் ரூபாய் பணப்பரிசு மூன்றாம் இடம் சின்னு செந்தமிழன் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பரிசாக பெற்றார்.
முதல் பரிசு பெற்ற சுசாந்திகா யார் தெரியுமா?
தமிழகத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சுசாந்திகா 12-ம் வகுப்பு இப்போது தான் முடித்துள்ளார்.
கர்நாடிக் சங்கீதம் பயின்ற இவர், முதல்முறை கலந்துகொண்ட நிகழ்ச்சியே சரிகமப நிகழ்ச்சிதான்.
தான் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள் சுசாந்திகா சிறப்பாக பாடியதை பார்த்த நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் இந்த பெண் பெரிய பின்னணி பாடகியாக வருவார் என்று கூறியிருந்தார். இதனை உறுதி செய்யும் விதமாக தற்போது சுசாந்திகா வெற்றி பெற்றுள்ளார்.

