– சிறிய லொறி ஒன்றிற்கும், வியாபார நிலையத்திற்கும் சேதம்
மாவனல்லை – ரம்புக்கனை வீதியில் தலகொல்ல பகுதியில் நேற்று (23) இரவு முச்சக்கர வண்டி ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணித்த 37 வயதான நபர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
இவ்விபத்தில் படுகாயமடை ந் த 2 ½ வயதுச் சிறுமி, 38 வயது பெண், 57 வயதான ஆண் ஆகியோர் படுகாயமடைந்து மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மரம் வீழ்ந்ததில் சிறிய வகை லொறி ஒன்றுக்கும் அருகிலிருந்த வியாபார நிலையம் ஒன்றுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த மரத்தை பாதையிலிருந்து அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருதவாகவும், அப்பணிகள் நிறைவடையும் வரை தலகல்ல பகுதியில் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே மாற்று வழிகளை பயன்படுத்துமாறு சாரதிகள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

