பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. சமையலறையில் உள்ள முக்கியமான பொருளான பூண்டு, சில பொதுவான நோய்களுக்கு சிகிச்சையளிக்கக்கூடியது.
உடல் ஆரோக்கியம்
இதற்கு காரணம் பூண்டில் உள்ள சல்பர் கலவைக் கொண்ட அல்லிசின் என்னும் பொருள் தான். அதிலும் தினமும் பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால், அதனால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, உடல் பல்வேறு நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.
பூண்டில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், வியர்வையால் ஏற்படும் நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.
தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தால், அது குளிர்காலத்தில் சந்திக்கும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம். ஆகவே தினமும் பூண்டு சாப்பிடுவது ஒருவரது நோயெர்ப்பு சக்தியை வலுவாக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் கொள்ளத் தேவையில்லை.
உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் அன்றாட உணவில் பூண்டு சேர்த்து வாருங்கள். இது இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, தமனி சார்ந்த அழுத்தத்தைக் குறைக்கும். எனவே உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்த, தினமும் 4 பல் பூண்டு சாப்பிட வேண்டும். மேலும் பூண்டு இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை 10-15% குறைக்கிறது. தினமும் பூண்டு சாப்பிடுவது, நினைவாற்றலை மேம்படுத்தி, மூளையின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும். எனவே உங்கள் மூளை சிறப்பாக செயல்பட பூண்டு உதவி புரியும்.
பூண்டு இதயம் மற்றும் தசைகளை திறம்பட செயல்பட வைக்கிறது. நீங்கள் விளையாட்டு வீரராக இருந்தால், தினமும் பூண்டு சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
பூண்டு பற்களை அரைத்து தலையில் தடவி பின், குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசவும். வேண்டுமானால் பூண்டு எண்ணெயைப் பயன்படுத்தலாம். மேலும் தினமும் பூண்டு சாப்பிடுவது சருமத்தில் கொலாஜன் அளவு மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும்.
பூண்டு சொத்தைப் பற்களின் அபாயத்தைக் குறைக்கும். எனவே உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென நினைத்தால், தினமும் பூண்டு சாப்பிட ஆரம்பியுங்கள். தினமும் பூண்டு சாப்பிடும் போது, தேவையற்ற உடல் பருமனைத் தடுக்கிறது. எனவே நீங்கள் ஒல்லியாக விரும்பினால், தினமும் பூண்டு சாப்பிடுங்கள்.

