குற்றவியல் அல்லது போக்குவ ரத்து தொடர்பான குற்றங்களுக்காக முறைப்பாடளிக்கப்பட்ட நபர்களைக் கண்காணிக்கும் தகவல் முறை (AMIS) என்ற புதிய டிஜிட்டல் தளத்தை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்ப டுத்தியுள்ளது.

இந்த அமைப்பின் மூலம் ஒரு நபர் இதற்கு முன் ஏதேனும் குற்றத்திற்காக முறைப்பாடு செய்யப்பட் டுள்ளாரா என்பதை அதிகாரிகள் உடனடியாக பரிசோ திக்க முடியும்.

இந்தத் தகவல் முறை நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் அணுகக் கூடியதாக உள்ளது. சந்தேகநபரின் விபரங்களை இதில் உள்ளிடும் “போது, முந்தைய முறைப்பா டுகள் எதுவும் இல்லையெனில், அவர்களை உடனடி யாக விடுவிக்க இந்த முறை வழி செய்கிறது.

அத்துடன் நீதிமன்ற அழைப்பாணைகளை வேண்டுமென்றே தவிர்ப்ப வர்களை இது அடையாளம் காண உதவுகிறது.

உதாரணமாக, போக்கு வரத்து விதிமீறல் தொடர் பாகப் பதிவு செய்யப்பட்ட ஒருவர், நீதிமன்ற உத்தரவு களை மீறியிருந்தால், அவர் Modelings மூலம் அடை யாளம் கண்டு உடனடியா கக் கைது செய்யலாம் என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply