திருகோணமலை – குச்சவெளி பகுதியில், நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட கடும் காற்றில் தனியார் கல்வி நிலையத்துடன் இணைந்த வீடொன்று நேற்று (24) மாலை அனர்த்தத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது, வீட்டின் கூரைகள் காற்றினால் வீசப்பட்டுள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிள் உட்பட வீட்டு தளபாடங்கள் மற்றும் மின்சார உபகரணங்களும் சேதமாகியுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேவேளை வரும் 30 ஆம் திகதிவரை இலங்கையில் கனமழை பெய்யும் என்பது வெள்ள அபாய அறிவிப்பையும் வளிமண்டலவியல் திணைக்கள்ம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply