கள்ளக்காதல் அட்டகாசங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் குடும்பங்கள் பிரிந்து, இறுதியில் நடுத்தெருவுக்கு நிற்கும் நிலைமை பெருகிவிடுகிறது. சேலத்தில் இளம்பெண் எடுத்த முடிவு, இரு குடும்பத்தினரையுமே நிலைகுலைய வைத்துவிட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அனைத்து மகளிர் பொலிஸ் ஸ்டேஷனுக்கு காதல் ஜோடி ஒன்று பதற்றத்துடன் வந்துள்ளனர்.
தாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதால், இரு குடும்பத்தினாராலும் தங்களுக்கு ஆபத்து உள்ளதாகவும், எனவே பாதுகாப்பு தருமாறும் பொலிஸாரிடம் கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து பொலிஸார் விசாரித்தபோது அந்த பெண்ணின் பெயர் பிரியா, காதலர் பெயர் ஹரிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டிருந்தபோதே, அந்த பெண்ணின் பெற்றோர் தரப்பிலும், அந்த இளைஞர் தரப்பிலும் திரண்டு பொலிஸ் நிலையத்துக்கு வந்துவிட்டார்கள்.
அதில் ஒருவர் பொலிஸாரிடம், நான்தான் அந்த பெண்ணின் தாலி கட்டிய கணவர் என்று கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பொலிஸார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், இந்த சம்பவத்தின் உண்மை வெளியே வந்தது
அதாவது, 4 வருடங்களுக்கு முன்பு ராமு என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார் பிரியா. இப்போது ராமுவுக்கு 30 வயதாகிறது. ஓமலூர் அருகே கொங்குபட்டி பகுதியை சேர்ந்த இவர் சின்ன திருப்பதியில் துணிக்கடை வைத்திருக்கிறார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை..
தன்னுடைய கணவர் துணிக்கடை வைத்திருந்தும்கூட, மற்றொரு துணிக்கடையில் வேலைக்கு சென்றுள்ளர் இளம்பெண்..
அபபோது சிமெண்டு விற்பனை கடையில் வேலை பார்க்கும் 25 வயது நபர் ஹரிஷ்குமாருடன் தொடர்பு ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது.
ஒருகட்டத்தில் கள்ளக்காதலர் ஹரிஷ்குமாரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த பிரியா, கடந்த வாரம் விட்டு வெளியேறியிருக்கிறார்.
கள்ளக்காதலனை ஊட்டிக்கு அழைத்து சென்று, கோவிலில் தாலியும் கட்டிக் கொண்டுள்ளார். பிறகு, கணவர் தங்களை பிரித்துவிடுவாரோ என்று பயந்து கொண்டு, பொலிஸில் தஞ்சம் அடைந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பொலிஸார் கணவருடன் சென்று குடும்பம் நடத்துமாறு அறிவுறுத்தினர்கள். ஆனால், பிரியா, கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என்று பிடிவாதம் பிடித்தார்.
கணவரை விவாகரத்து செய்யாமல், இப்படி திருமணம்செய்வது தவறு என்று என்று பொலிஸார் அறிவுறுத்தியதுடன், பெற்றோருடன் செல்லுங்கள் என்று கூறினார்கள்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், பெற்றோருடன் செல்ல விருப்பமின்றி சம்மதித்தார் பிரியா. பெற்றோருடன் பிரியாவை பொலிஸார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஓமலூர் ஸ்டேஷனில் பரபரப்பை தந்துவிட்டது
முன்னதாக, பொலிஸில் பிரியா தாலி கட்டி கொண்டு நிற்பதை பார்த்ததுமே, அதிர்ச்சியடைந்த ராமுவும், அவரது உறவினர்கள், பிரியாவை தாக்க முயன்றனர்.
ஆனால் அவர்களை மகளிர் பொலிஸார் தடுத்து வெளியேற்றினர். ஆனால், வெளியில் நின்று கொண்டிருந்த ஹரிஷ்குமாரை வீட்டாரை சரமாரியாக தாக்கினார்கள்.
பொலிஸார் பிரியாவிடம் தனிப்பட்ட விசாரணை நடத்தினார்கள். அப்போது, “திருமணமாகி 3 வருடங்களாக கணவர் ராமு, என்னுடன் குடும்பம் நடத்தவில்லை.
அதனால், எனது வாழ்க்கையை நானே தேர்வு செய்து கொண்டேன். என்னை காதல் கணவர் ஹரிஷ்குமாருடன் அனுப்பி வைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மற்றொருபக்கம் கணவர் ராமு தன்னுடன் மனைவியை அனுப்புங்கள் என்று பொலிஸாரிடம் கேட்டுக் கொண்டார்.
இவர்களிடம் பொலிஸார் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அதற்கு பிறகுதான், பெற்றோருடன் செல்கிறேன் என்று அரைமனதுடன் சொல்லி உள்ளார் பிரியா.

