நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு முதலான அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 212 பேர் உயிரிழந்ததோடு 218 பேர் காணாமற்போயுள்ளதாகவும் மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (30) மாலை 4 மணி வரையான காலப்பகுதியில் கிடைத்த புள்ளிவிபரத்தின் அடிப்படையில் இத்தகவலை இந்நிலையம் வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த 25 மாவட்டங்களிலும் இயற்கை அனர்த்தத்தினால் மொத்தமாக 273,606 குடும்பங்களைச் சேர்ந்த 998,918 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நாட்டில் 1,275 அனர்த்த பாதுகாப்பு முகாம்களில் 51,228 குடும்பங்களைச் சேர்ந்த 180,499 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


