கடந்த நவம்பர் 27ஆம் திகதி பெய்த கனமழை காரணமாக கண்டி மாவட்டம், உடத்தல, நெலும்மல பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேரின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றுள்ளன.

  • சம்பவ விவரம்: எதிர்பாராத தருணத்தில், சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மலை உச்சியில் இருந்து ஒரு பெரிய மண் மேடு சரிந்து இந்தச் சிறிய கிராமத்தை முழுமையாக மூடியுள்ளது.

  • நிலச்சரிவு நடந்த இடம்: அழகான நெல் வயலின் நடுவில் அமைந்திருந்த இந்த கிராமத்திற்கு மேலே அமைந்திருந்த யஹங்கல மலைத்தொடரும், நக்கிள்ஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தமையே இந்தக் கோரச் சம்பவத்திற்குக் காரணம் ஆகும்.

மீட்புப் பணிகள்:

சம்பவம் நடந்த பகுதியைத் தொடர்ந்து இராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் தேடுதல் பணிகளை முன்னெடுத்த நிலையில், 31 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்தக் கோரச் சம்பவத்தில் மேலும் பலரைக் காணவில்லை என்பதால், அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Share.
Leave A Reply