பொதுவாக பெரும்பாலானவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்றாகும். முடி உதிர்தல், பொடுகு, வழுக்கை, வலுவிழந்த முடி, நரை முடி உள்ளிட்ட பல பிரச்சனைகள் இன்று அதிகரித்து வருகிறது.
அப்படிப்பட்ட முடி பிரச்சனைகளுக்கு இயற்கையான மற்றும் பக்கவிளைவு இல்லாத ஒரு அருமையான தீர்வு வெந்தய ஹேர் சீரம். மிக எளிதாக வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய இந்த சீரம் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிர்வை குறைக்கவும் சிறப்பாக உதவுகிறது.
தேவையான பொருட்கள்
-
வெந்தயம் – 2 ஸ்பூன்
-
தண்ணீர் – 1 கப்
எப்படி தயாரிப்பது?
-
முதலில் வெந்தயத்தை ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
-
மறுநாள் காலையில் வெந்தயத்தை வடிகட்டி அதன் நீரைக் மட்டும் எடுக்கவும்.
-
அந்த நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்.
-
தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு தலையில் முழுவதும் இந்த சீரத்தை தெளிக்கவும்.
-
பிறகு மெதுவாக 10 நிமிடங்கள் தலையில் மசாஜ் செய்யவும்.
எதற்கு இது வேலை செய்கிறது?
புரதம் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த வெந்தயம்
✔ தலையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்
✔ முடி வேர்களை வலுப்படுத்தும்
✔ முடி உதிர்வை குறைக்கும்
✔ முடி அடர்த்தியை அதிகரிக்கும்
இதனால் முடி உதிர்தல் மற்றும் முடி வலுவிழக்கும் பிரச்சனைகள் குறைவதோடு, புதிய முடி வளர்ச்சியும் மேம்படுகிறது.

