திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் நபரைத் தாக்கி கொலை செய்வதற்காக ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை மேற்கொண்ட இரு சந்தேக நபர்கள், ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர் ஒருவர், தனது மனைவியின் காதலனைத் தாக்குவதற்காக மீரிகமவைச் சேர்ந்த நபருக்கு இந்த ஒப்பந்தத்தை வழங்கியதாகப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரன்மிஹிதென்னவில் வசிக்கும் காதலனின் புகைப்படமும் வாட்ஸ்அப் மூலம் சந்தேக நபருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

