தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பது பலருக்கும் வழக்கமான பழக்கமாக உள்ளது. ஆனால் இந்தப் பழக்கம் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா? வெறும் வயிற்றில் தேநீர் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது குறித்து மருத்துவர்கள் முக்கிய எச்சரிக்கைகளை வழங்கியுள்ளனர்.
வயிற்று எரிச்சல் மற்றும் அசிடிட்டி
தேநீரில் உள்ள கஃபைன் மற்றும் டேனின்ஸ் (Tannins) வயிற்றிலுள்ள மெல்லிய தசைகளில் எரிச்சலை ஏற்படுத்தும். இதன் விளைவாக
-
தலைச்சுற்றல்
-
அசிடிட்டி
-
வயிற்று வலி
-
குமட்டல்
போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
நீரிழப்பு ஏற்படும் அபாயம்
தேநீர் உடலில் உள்ள அதிகப்படியான நீர் மற்றும் உப்புகளை (எலக்ட்ரோலைட்டுகள்) சிறுநீர் வழியாக வெளியேற்றும் தன்மை கொண்டது. ஏற்கெனவே தூங்கி எழும்போது உடலில் சிறிய அளவு நீரிழப்பு இருக்கும் நிலையில், வெறும் வயிற்றில் டீ குடிப்பது அந்த நிலையை மேலும் மோசமாக்கலாம்.
செரிமானக் கோளாறுகள்
வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கும்போது வயிற்றில் உள்ள அமிலம் எளிதில் நீர்த்துப்போகும். இதனால்
-
காலை உணவின் செரிமானம் தாமதமாகும்
-
இரைப்பை அழற்சி (Gastritis)
-
வயிற்று அசௌகரியம்
போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஏற்கெனவே அசிடிட்டி பிரச்னை உள்ளவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம்.
மன அழுத்தம் மற்றும் பதற்றம்
அளவுக்கு அதிகமான கஃபைன் உடலுக்குள் சென்றால்
-
பதற்றம்
-
மன அழுத்தம்
-
சோர்வு
-
ஓய்வின்மை
போன்ற மனநலச் சிக்கல்கள் உருவாகக்கூடும்.
உணவுடன் டீ குடிப்பதும் ஆபத்துதான்
வெறும் வயிற்றில் மட்டுமல்ல, உணவுக்கு முன்போ அல்லது உடனடியாக உணவுக்குப் பிறகோ தேநீர் குடிப்பதும் நல்லதல்ல. தேநீரில் உள்ள அமிலங்கள் உடலில் உள்ள புரதம் மற்றும் இரும்புச்சத்துடன் சேர்ந்து, அவை சரியாக உட்கிரகிக்கப்படாமல் தடுக்கும். இதனால் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படலாம்.
அதனால்தான் மருத்துவர்கள், உணவுக்கு 20–30 நிமிடங்களுக்கு முன்னரோ அல்லது பின்னரோ தேநீர் அருந்துவது சிறந்தது என அறிவுறுத்துகின்றனர்.
டீக்கு மாற்றாக என்ன அருந்தலாம்?
காலையில் டீ குடிக்கும் பழக்கமுள்ளவர்கள், அதற்கு பதிலாக
-
கஃபைன் இல்லாத மூலிகை தேநீர்
-
மஞ்சள்
-
இஞ்சி
-
இலவங்கப்பட்டை
-
மிளகு
போன்றவற்றை பால் சேர்க்காமல், இனிப்புக்கு தேன் சேர்த்து அருந்தலாம்.
-
மேலும்,
-
எலுமிச்சை சாறு
-
புதினா
சேர்த்த வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவது செரிமானத்தை மேம்படுத்த உதவும்.
மருத்துவர்களின் ஆலோசனை
முடிந்தவரை வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது உடலுக்கு அதிக நன்மைகளை அளிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

