மட்டக்களப்பு, கிரான் – கும்புறுமூலைச் சந்தியில் நேற்று (டிசம்பர் 15) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதியதில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில், மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் கற்கை நெறியைத் தொடர்ந்துகொண்டிருந்த கிரானைச் சேர்ந்த சுரேந்திரன் கிசாளன் எனும் மாணவனே உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றவர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்துச் சம்பவம் குறித்து வாழைச்சேனை போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

