மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் வாகனேரி பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக 46 வயதுடைய கணவர் ஒருவர் மனைவியின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

விவசாய நடவடிக்கைகளுக்காக வெளியே சென்றுவிட்டு காலை வீடு திரும்பிய கணவர், தனது மனைவியிடம் காலை உணவாகப் ‘புட்டு’ தயாரித்து தருமாறு கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, வாக்குவாதத்தின் போது கணவர் கூர்மையான ஆயுதத்தால் மனைவியைத் தாக்க முயன்றதாகவும், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக மனைவி பதிலுக்குத் தாக்கியதில் கணவர் மரணமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 42 வயதுடைய சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply