அர­பு­லக சர்­வா­தி­கா­ரிகள் தான் ஜன­நா­யகம், நீதி, அரபு மக்­களின் நல்­வாழ்வு மற்றும் பலஸ்­தீன பிரச்­சி­னைக்கு தீர்வு காணல் என்­ப­ன­வற்­றுக்­கான முதன்மை தடை­யாக உள்­ளனர் என்று வாதி­டு­கின்றார் பிர­பல பிரிட்­டிஷ்-­ப­லஸ்­தீ­ன-­ஜோர்­டா­னிய கல்­வி­மானும் அர­சியல் ஆர்­வ­ல­ரு­மான டாக்டர் அஸாம் தமீமி.

டாக்டர் அஸாம் தமீமி.

மத்­திய கிழக்கின் தற்­போ­தைய அர­சியல் சூழ்­நி­லையை விவரித்த டாக்டர் தமீமி “இஸ்ரேல் அரபு ஆட்­சி­யா­ளர்­ளைக்­கொண்ட பாது­காப்பு சுவரால் பாது­காக்­கப்­ப­டு­கின்­றது.

அரபு மக்கள் ஒரு சிறையில் வசித்து வரு­கின்­றனர். அவர்­களின் சிறைச்­சா­லைகள் அவர்­களின் ஆட்­சி­யா­ளர்­க­ளாவர்.

அந்த ஆட்­சி­யா­ளர்கள் தமது மக்­களின் அடிப்­படை உரி­மை­களை மறுக்­கின்­றனர். மேலும் அவர்­களின் செல்­வத்தைத் திருடி வேறு இடங்­க­ளுக்கு கடத்தி வரு­கின்­றனர்” எனத் தெரி­வித்­துள்ளார்.

இந்த சோகம் ஒரு நூற்­றாண்­டுக்கும் மேலாக தொடர்ந்து வரு­கின்­றது. இது முஸ்லிம் மத்­திய கிழக்­கிற்கு எதி­ரான மேலைத்­தேச தீய வடி­வ­மைப்­பு­க­ளுக்கு உத­வு­கின்­றது.

map-of-ottoman-empire(துருக்கி பேர­ரசு)

அரபு முஸ்லிம் நாடுகள் துருக்கி பேர­ரசின் ஒரு பகு­தி­யாக இருந்­தன. முதலாம் உலகப் போரின்­போது துருக்­கியப் பேர­ரசு வீழ்ச்­சி­ய­டைந்­தது.

வெற்­றி­யா­ளர்­க­ளான பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு கால­னித்­துவ சக்­திகள் கைப்­பற்­றப்­பட்ட மத்­திய கிழக்கைப் பிரித்து சிறிய அர­சு­களை உரு­வாக்கி அவற்றில் தங்கள் நலன்­க­ளுக்­காக கவ­ன­மாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அரபு அடி­மை­களை அதி­கா­ரத்தில் நிறு­வினர்.

இந்த அடி­மை­களின் சந்­த­தி­யினர் தான் தங்கள் மேலைத்­தேச எஜ­மா­னர்­களால் பாது­காக்­கப்­பட்டு இன்றும் ஆட்சி அதி­கா­ரத்தில் உள்­ளனர்.

இந்த ஆட்­சிகள் இன்று அர­சியல் ரீதி­யான தமது சுய இருப்பை தக்­க­வைத்துக் கொள்ள அமெ­ரிக்­க-­இஸ்­ரே­லிய நலன்­க­ளுக்கு சேவை செய்­கின்­றன.

பல ஆண்­டு­க­ளாக நீடித்து வரும் நிலைமை என்­ன­வென்றால் இந்த சர்­வா­தி­கா­ரிகள் தங்கள் அர­சியல் இருப்­புக்­காக இஸ்­ரேலின் கட்­டுப்­பாட்டில் உள்ள அமெ­ரிக்­காவை மட்­டுமே இன்றும் நம்பி உள்­ளனர்.

இந்த விசு­வா­சத்­துக்குப் பக­ர­மாக அவர்கள் பிராந்­தி­யத்­திற்கு எதி­ராக அமெ­ரிக்­க-­ – ஐ­ரோப்­பி­ய-­ – இஸ்­ரே­லிய திட்­டங்­களை செயல்­ப­டுத்­து­கின்­றார்கள்.

அண்மைக் காலங்­களில் தொடங்கி தற்­போதும் இடம்­பெற்று வரும் காஸாவில் பலஸ்­தீ­னர்கள் மீதான இஸ்­ரே­லிய இனப்­ப­டு­கொ­லை­யையும், மேற்குக் கரையில் நடை­பெற்று வரும் பாரம்­ப­ரிய சியோ­னிச காட்­டு­மி­ராண்டித் தனத்­தையும் ஆத­ரித்­ததன் மூலம் அர­பு­லக சர்­வா­தி­கா­ரி­களின் அமெ­ரிக்க, இங்­கி­லாந்­து-­, ஐ­ரோப்­பிய விசு­வாசம் மிகத் தெளி­வாக நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

 

வர­லாற்றை நோக்­கு­கையில் அரபு சர்­வா­தி­கா­ரி­களை அதி­கா­ரத்தில் அமர்த்தும் போது பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அர­சு­களும் பிற்­கா­லத்தில் அவர்­க­ளோடு இணைந்து கொண்ட அமெ­ரிக்க ஏகா­தி­பத்­திய சக்­தி­களும், பலஸ்­தீ­னர்­களை தங்கள் வீடு­க­ளி­லி­ருந்தும் நிலங்­க­ளி­லி­ருந்தும் அகதி முகாம்­க­ளுக்குள் விரட்­டி­ய­டித்து பலஸ்­தீனில் இஸ்­ரேலின் ஒரு செயற்­கை­யான காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான அரசை உரு­வாக்­கினர் என்­பதைக் கட்­டாயம் குறிப்­பிட்டே ஆக வேண்டி உள்­ளது.

முஸ்லிம் மத்­திய கிழக்கு அறி­யா­மை­யு­டனும் வளர்ச்­சி­ய­டை­யா­மலும் தொடர்ந்து இருப்­பதை உறுதி செய்­வ­தற்கும், துருக்கிப் பேர­ரசு போன்ற ஒரு பலம்­மிக்க சக்­தி­யாக மீண்டும் தலை நிமி­ராமல் தடுப்­ப­தற்கும் உரிய ஒரு வழி­யாக இது இருந்­தது.

அன்று முதற் கொண்டே இஸ்ரேல் அண்டை நாடு­க­ளுக்கு எதி­ராக ஏரா­ள­மான போர்­களைத் தொடுத்­துள்­ளது. மற்றும் எகிப்­திய, சிரிய, ஜோர்­டா­னிய மற்றும் லெப­னானின் பிர­தே­சங்­க­ளையும் அது கைப்­பற்றி உள்­ளது.

அவற்றை இஸ்ரேல் அமெ­ரிக்­க –­ ஐ­ரோப்­பிய ஆத­ர­வுடன் சட்­ட­வி­ரோ­த­மாக தன்­னோடு இணைத்துக் கொண்­டது. இஸ்ரேல் இது­வரை 30 இற்கும் மேற்­பட்ட பலஸ்­தீ­னர்கள் மீதான மிகப்­பெ­ரிய அள­வி­லான இனப்­ப­டு­கொ­லை­களைப் புரிந்­துள்­ளது.

அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்­பி­யர்­களின் ஆத­ர­வுடன் இந்த காட்­டு­மி­ராண்­டித்­த­னங்கள் அனைத்தும் கவ­னிக்­கப்­ப­டாமல் மூடி மறைக்­கப்­பட்டு விட்­டன. அதே நேரத்தில் அரபு சர்­வா­தி­கா­ரிகள் இந்த விட­யத்தில் ஒட்­டு­மொத்­த­மாக அலட்­சி­ய­மா­கவே இருந்­துள்­ளனர்.

இதற்­கி­டையில் 1979இல் ஈரானில் இடம்­பெற்ற இஸ்­லா­மியப் புரட்சி அங்கு ஆட்­சியில் இருந்த மேலைத்­தேச சார்பு பஹ்­லவி வம்­சத்தை 1979இல் கவிழ்த்­தது.

புதிய புரட்சி இஸ்­லாத்தின் புகழை மீட்­டெ­டுப்­பது பற்றி பேசத் தொடங்­கி­யது. அதே நேரத்தில் இஸ்­ரேலை கடு­மை­யாக எதிர்த்­த­தோடு பலஸ்­தீன மக்­க­ளையும் அவர்­களின் போராட்­டத்­தையும் ஆத­ரித்­தது.

அரபு சர்­வா­தி­கா­ரிகள் முஸ்­லிம்­க­ளாக இருந்­ததால் அவர்கள் அமெ­ரிக்கா தலை­மை­யி­லான மேற்கு மற்றும் இஸ்­ரே­லுக்கு எதி­ரான போரில் ஈரானை ஆத­ரிப்­பார்கள் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

மாறாக அவர்கள் ஈரா­னுக்கு விரோ­த­மாக அமெ­ரிக்­க-­-ஐ­ரோப்­பிய மற்றும் இஸ்­ரே­லிய சதி­கா­ரர்­களின் பக்கம் நின்­றனர்.

அவர்கள் சவூதி அரே­பியா மூலம் ஈராக் சர்­வா­தி­காரி சதாம் ஹுசைனை ஈரான் மீது படை­யெ­டுக்க வற்­பு­றுத்தச் செய்து எட்டு ஆண்­டு­கால ஈராக்-­-ஈரான் போரைத் தூண்­டினர். இது கிட்­டத்­தட்ட இரு நாடு­க­ளை­யுமே அழித்­தது. இரு நாடு­க­ளிலும் சுமார் இரண்டு மில்­லியன் மக்­க­ளையும் கொன்­றது.

ஏனைய அரபு சர்­வா­தி­கா­ரி­களும் கூட அமெ­ரிக்­க–­ஐ­ரோப்­பி­ய-­-இஸ்­ரே­லிய ஆத­ர­வுடன் ஈரா­னுக்கு எதி­ராக சதாம் ஹுசைனை ஆத­ரித்­தனர்.

பின்னர் அமெ­ரிக்க மற்றும் ஐரோப்­பி­யர்கள் சதாம் ஹுசைனை ஏமாற்றி குவைத் மீது படை­யெ­டுக்­கவும் தூண்­டினர்.

இதனால் குவைத் நெருக்­கடி ஏற்­பட்­டது. இதனைப் பயன்­ப­டுத்திக் கொண்ட அமெ­ரிக்­காவும் மற்றும் ஐரோப்­பாவும் இஸ்­ரேலும் இந்தப் பிராந்­தி­யத்­திற்குள் நுழைந்து குண்­டு­வீசி குவைத், ஈராக் மற்றும் பிற வளை­குடா நாடு­க­ளுக்கு கணி­ச­மான சேதத்தை ஏற்­ப­டுத்­தின.

தமது தேவைகள் முடிந்­ததும் ஈராக்­கிற்கு சாவு மணி அடிக்கும் நோக்கில் அமெ­ரிக்­க-­, ஐ­ரோப்­பிய யுத்த வெறி­யர்கள், ஈராக் பேர­ழிவு ஆயு­தங்­களை வைத்­தி­ருப்­ப­தாக பொய்­யாக குற்றம் சாட்­டினர்.

அமெ­ரிக்கா தலை­மை­யி­லான யுத்த வெறி­யர்கள் ஈராக் மீது படை­யெ­டுத்து கிட்­டத்­தட்ட அபி­வி­ருத்தி அடைந்­தி­ருந்த இந்த எண்ணெய் வளம் நிறைந்த பண்­டைய நாட்டை ஒரு கல்­ல­றை­யாக மாற்­றினர்.

எகிப்தின் ஹோஸ்னி முபாரக், டமஸ்­கஸின் கசாப்­புக்­க­டைக்­காரன் என வர்­ணிக்­கப்­படும் சிரி­யாவின் கொடுங்­கோலன் ஹபீஸ் அல் ஆசாத் ஆகி­யோரும் ஏனைய வளை­குடா நாடுகள் மற்றும் பிற அரபு சர்­வா­தி­கா­ரி­களும் அமெ­ரிக்கா தலை­மை­யி­லான இந்த போரை ஆத­ரித்­தனர்.

அதன் பின்னர் 2011 அரபு வசந்தம் தொடங்­கி­யது. தொடர்ச்­சி­யான அர­சாங்க எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் கிளர்ச்­சிகள் மற்றும் ஆயு­த­மேந்­திய கிளர்ச்­சிகள் என அது பர­வி­யது.

இது துனி­சியா, எகிப்து மற்றும் லிபி­யாவில் கொடுங்­கோ­லர்­களை பத­வியில் இருந்து தூக்கி வீசி­யது. அந்த காலப் பகு­தியில் அந்தப் பிராந்­தி­யத்தில் மக்கள் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனு­ப­வித்து வந்­தனர். இன்று போரினால் பாதிக்­கப்­பட்ட லிபியா கிட்­டத்­தட்ட அமெ­ரிக்­க-­இஸ்­ரே­லிய யுத்த பிர­புக்­களால் தான் ஆளப்­ப­டு­கின்­றது.

அரபு சர்­வா­தி­கா­ரி­களின் துரோ­கத்தின் உச்சம் அவர்கள் அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து மற்றும் ஐரோப்­பி­யர்­க­ளுடன் இணைந்து காஸாவில் பலஸ்­தீ­னர்­களை இனப்­ப­டு­கொலை செய்­வ­தற்கும் காஸாவை அழிப்­ப­தற்கும் ஆத­ர­வ­ளித்­த­மை­யாகும். 2023 அக்­டோபர் 8, இல் தொடங்­கிய இந்த படு­கொலை இன்­று­வரை தடை­யின்றி தொடர்­கின்­றது.

இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோ­ஷிமா மற்றும் நாக­சா­கியில் நடந்­ததை விட மூன்று மடங்கு அதி­க­மாக இஸ்ரேல் காஸால் குண்­டு­வீ­சி­ய­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இது மிகவும் பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மா­னது என்றும் வர்­ணிக்­கப்­ப­டு­கின்­றது. எகிப்து, ஜோர்டான், சவூதி அரே­பியா, ஐக்­கிய அரபு அமீ­ரகம் மற்றும் பிற அண்டை நாடு­களில் உள்ள அரபு சர்­வா­தி­கா­ரிகள் பலஸ்­தீ­னர்கள் மீதான இஸ்­ரே­லிய காட்­டு­மி­ராண்­டித்­த­னத்­தையும், உலகின் மிகவும் அடர்த்­தி­யான மக்­கள்­தொகை கொண்ட இடங்­களில் ஒன்­றான காஸாவின் அழி­வையும் ஆத­ரித்­தனர்.

தன்னை ஒரு சியோ­னிஸ வாதி என்று பெரு­மை­யுடன் அழைத்துக் கொண்ட அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி ஜோ பைடன் மற்றும் தற்­போ­தைய ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இரு­வரும் இணைந்து சுமார் 30 பில்­லியன் டொலர்­களை இது­வரை இஸ்­ரே­லுக்­காக செல­வ­ழித்­துள்­ளனர்.

அத்­தோடு இஸ்­ரேலின் இனப்­ப­டு­கொ­லையில் அதி­ந­வீன ஆயு­தங்­க­ளையும் அர­சியல் ஆத­ர­வையும் வழங்­கி­யுள்­ளனர்.

உண்­மையில் இந்த இனப்­ப­டு­கொலை அமெ­ரிக்க ஆத­ரவால் மட்­டுமே சாத்­தி­ய­மா­னது. மறு­புறம் இதே டொனால்ட் ட்ரம்ப் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட ஜெரு­ச­லேமை தனது முன்­னைய பதவி காலத்தில் இஸ்­ரேலின் தலை­ந­க­ராக அங்­கீ­க­ரித்தார்.

அது தான் இஸ்­லாத்தின் முதல் கிப்லா (தொழுகை மற்றும் பிரார்த்­த­னைக்­கான) திசை­யான மஸ்ஜித் அல் அக்ஸா அங்கு தான் அமைந்­துள்­ளது.

இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்கள் மீதான இத்­த­கைய விரோதப் போக்கு அமெ­ரிக்­கா­விடம் இருந்­த­போ­திலும், சவூதி, கட்டார் மற்றும் ஐக்­கிய அரபு அமீ­ரக சர்­வா­தி­கா­ரிகள் இந்த நாடு­க­ளுக்கு ட்ரம்ப் விஜயம் செய்­த­போது அவ­ருக்கு ஆடம்­ப­ர­மான வர­வேற்பை வழங்க போட்­டி­யிட்­டனர்.

அமெ­ரிக்கா மற்றும் இஸ்ரேல் மீதான அர­சியல் சார்பு விசு­வா­சத்தை புலப்­ப­டுத்த அரபு சர்­வா­தி­கா­ரிகள் ஜெரு­சலேம், மஸ்ஜித் அல் அக்ஸா மற்றும் இஸ்லாம் ஆகி­ய­வற்றை கைவிட்டு விட்­டதை வெளிப்­ப­டை­யாக உல­குக்கு எடுத்துக் காட்டி அவர்கள் ட்ரம்பை மகிழ்வித்து தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக பில்லியன் கணக்கான டொலர்களை அமெரிக்காவில் முதலீடும் செய்தனர்.

இதனால்தான் டாக்டர் தமீமி, “நாங்கள் பலஸ்தீனை விடுவிக்க மட்டும் முயற்சிக்கவில்லை பலஸ்தீனமும் உம்மாவை (உலக முஸ்லிம் சமூகத்தை) விடுவிக்கின்றது” என்று கூறுகின்றார்.

காஸாவைப் பற்றி நாம் பேசும்போது பரந்த முஸ்லிம் உலகத்திலிருந்து அந்த மக்கள் தனிமைப்படுத்தப்படுவதைப் பற்றி அடிக்கடி பேசுகின்றோம்.

அதேபோல் முஸ்லிம் நாடுகளை குறிப்பிடும் போது அவர்கள் பலஸ்தீன காரணத்தை கைவிட்டுவிட்டதாக கூறுவதும் இயல்பானதே.

ஆபிரகாம் உடன்படிக்கைகள் பெரும்பாலும் முஸ்லிம் உலகம் ஒரு சர்ச்சைக்குரிய உறுப்பினரை புறக்கணித்துள்ளமைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிடப்படுகின்றன.

ஆனால், உண்மையில் அப்படித்தான் இருக்கின்றதா, பலஸ்தீனர்களின் எதிர்கால அதிர்ஷ்டம் முஸ்லிம் ஆட்சியாளர்களுடன் இணைக்கப்பட்டுள்ளதா “என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

லத்தீப் பாரூக்

தொடா்புடைய கட்டுரைகள்

அரபுலகின் யதார்த்தம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share.
Leave A Reply