கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய 19 துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) தற்போது விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளது.
கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டார்.
2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு நிழல் உலகக் கும்பல் தலைவர் மாகந்துர மதூஷிடம் இருந்து மீட்கப்பட்டது.
குறித்த துப்பாக்கி எவ்வாறு மதூஷின் கைக்குச் சென்றது அல்லது எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து முறையான விளக்கமளிக்க அவர் தவறியமையே இந்த கைதுக்கு முக்கிய காரணமாகும்.
72 மணிநேர தடுப்புக்காவல் விசாரணைமுடிந்த நிலையில், இன்றைய தினம் (28.12.25) கம்பஹா நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
விசாரணையின் தீவிரத்தை கருத்தில்கொண்டு எதிர்வரும் 9ஆம் திகதி வரை அவரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ஏனைய 19 துப்பாக்கிகளின் நிலை குறித்தும் சி.ஐ.டி அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்

