இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் தமிழகக் கடற்கரைக்கு அருகில் வைத்து இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
-
பறிமுதல்: இந்திய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 6 கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
பின்னணி: தென்னிந்திய கடல் வழித்தடங்களைப் பயன்படுத்தி இயங்கி வரும் சர்வதேசத் தங்கக் கடத்தல் வலையமைப்புகளை முறியடிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.
-
சந்தை நிலவரம்: சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில், இலங்கையிலும் ஒரு பவுன் தங்கத்தின் விலை 3.5 இலட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்த விலையேற்றத்தைப் பயன்படுத்தி இலாபம் ஈட்டும் நோக்கில் இக்கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

