புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், மாணவர்களின் கற்றல் முறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய பாடத்திட்டங்கள் மற்றும் தொகுதிகள் (Modules) அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
-
ஆரம்பமாகும் திகதிகள்:
-
தரம் 6: புதிய பாடத்திட்டம் ஜனவரி 21-ஆம் திகதி ஆரம்பமாகும்.
-
தரம் 1: புதிய பாடத்திட்டம் ஜனவரி 29-ஆம் திகதி ஆரம்பமாகும்.
-
-
ஆசிரியர் பயிற்சிகள்: இந்த மாற்றத்திற்கு ஏற்ப 1,32,580 ஆசிரியர்களுக்கு ஏற்கனவே பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களில் 93 சதவீதமானோர் பயிற்சியை முழுமையாக முடித்துள்ளனர்.
-
பெற்றோருக்கான விழிப்புணர்வு: புதிய முறையைப் பிள்ளைகள் இலகுவாகப் பின்பற்றுவதற்குத் தேவையான வழிகாட்டல்கள் பெற்றோர்களுக்கும் வழங்கப்படும் எனப் பிரதமர் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
-
உட்கட்டமைப்பு: பாடத்தெரிவுகள் மற்றும் புதிய சீர்திருத்தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது.

