வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, நாளை (ஜனவரி 6) முதல் ஜனவரி 12-ஆம் திகதி வரை இலங்கையில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.
-
பாதிக்கப்படும் மாகாணங்கள்: வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்குப் பலத்த மழை பெய்யும்.
-
அதிதீவிர எச்சரிக்கை: குறிப்பாக ஜனவரி 6 முதல் 11 வரை வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு மிக மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
அனர்த்த அபாயம்: தொடர்ச்சியான மழை காரணமாக மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
-
நீர்த்தேக்கங்கள்: கனமழை காரணமாக நீர்மட்டம் உயரும் என்பதால் நீர்த்தேக்க முகாமையாளர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அல்லது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

