தமிழ் சினிமாவில் முதல் முறையாக சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகிய மூன்று முன்னணி நடிகர்கள் ஒன்றாக நடித்துள்ள திரைப்படம் தான் பராசக்தி. இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீலீலா தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள நிலையில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மேலும் மலையாள நடிகர் பேசில் ஜோசப் மற்றும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்பதிவு வசூல் நிலவரம்
வருகிற ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள பராசக்தி படத்திற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில்,
-
இதுவரை நடைபெற்ற உலகளாவிய முன்பதிவில்
-
பராசக்தி படம் ரூ. 1.26 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகர்கள் கூட்டணி, சுதா கொங்கராவின் இயக்கம் மற்றும் வலுவான கதை ஆகிய காரணங்களால், படம் வெளியான பின் வசூல் வேகமாக உயர வாய்ப்புள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

