கடந்த வாரம் சற்று ஓய்ந்திருந்த மழை, நேற்று (ஜனவரி 6, 2026) அதிகாலை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழைவீழ்ச்சியாகப் பதிவாகி வருகிறது.
-
மழைவீழ்ச்சி விபரங்கள் (கடந்த 24 மணித்தியாலங்களில்):
-
நவகிரி: 55 மி.மீ
-
மட்டக்களப்பு நகர்: 39.5 மி.மீ
-
வாகரை: 38 மி.மீ
-
தும்பங்கேணி: 36 மி.மீ
-
உன்னிச்சை: 33 மி.மீ
-
மைலம்பாவெளி: 31 மி.மீ
-
உறுகாமம்: 26 மி.மீ
-
கல்முனை: 19.5 மி.மீ
-
-
ஆண்டு மழைவீழ்ச்சி: கடந்த 2025-ஆம் ஆண்டில் மொத்தமாக 1863.4 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
-
குளங்களின் நிலை: தொடர் மழையினால் உன்னிச்சை, உறுகாமம் மற்றும் நவகிரி போன்ற பிரதான குளங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்துள்ளது. களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை போன்ற பகுதிகளில் உள்ள பல கிராமியக் குளங்கள் தற்போது முற்றாக நிரம்பி வான்பாயத் தொடங்கியுள்ளன.
-
மக்களின் பாதிப்பு: முறையான வடிகான் வசதி இல்லாத காரணத்தினால் உள்வீதிகள் மற்றும் தாழ்நிலக் குடியிருப்புக்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

