பூஸா சிறைச்சாலையில் கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரி ஒருவர்மீது தாக்குதல் நடத்துவதற்கு இரண்டு கைதிகளுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் ரத்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கும் இரண்டு கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே இந்த தாக்குதலுக்கு காரணமாக அமைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் போது தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை அதிகாரி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பில் ரத்கம பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், குறித்த தாக்குதலை நடத்துவதற்கு இரண்டு கைதிகளுக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளை காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

