இந்த எபிசோடில் மூன்றே பகுதிகள் மட்டுமே இருந்தன. கானா வினோத் farewell, பிரவீன் ராஜை வறுத்தது, வியானாவின் குழப்பத்தைக் கேட்டது.
“யார் சொல்லியும் பணப்பெட்டியை எடுக்கலை. அது என் சுயமுடிவு” என்று மேடையில் வினோத் தெரிவித்தது நன்று. இதன் மூலம் ‘அவன் கிள்ளிட்டான், இவன் தூண்டிட்டான்’ என்கிற சர்ச்சைகளுக்கு முடிவு தந்து விட்டார்.
இந்த எபிசோடில் மூன்றே பகுதிகள் மட்டுமே இருந்தன. கானா வினோத் farewell, பிரவீன் ராஜை வறுத்தது, வியானாவின் குழப்பத்தைக் கேட்டது.
இதில் வினோத் விடைபெறும் பகுதியைத் தவிர எதுவுமே சுவாரசியமாக இல்லை.
“வீட்டுக்கு திரும்பி வந்தவங்க கிட்ட ஒரு ஃபயர் இருக்கு. அதை ஏன் ஆட்டத்துல இருக்கும்போதே காட்டலை.. நானும் தலை தலையா அடிச்சிக்கிட்டேன். வெளியல விமர்சனங்கள் பார்த்துட்டு வந்தாங்களான்னு தெரியல.
ஒரு வார்த்தையை வெச்சு ஒரு நாள் முழுக்க டிகோட் பண்ணிட்டு இருக்காங்க. வாங்க என்னன்னு விசாரிப்போம். அதுக்கு முன்னாடி வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்’ என்றார் விசே.
அந்த வெள்ளிக்கிழமையில் வழக்கம் போல் ஒன்றுமில்லை. கார்டன் ஏரியாவில் கைகாலை நீட்டி படுத்து விட்ட திவாகரை வைத்து மற்றவர்கள் செய்த ‘டெட்பாடி காமெடி’ நன்று. திவாகரும் இதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டார்.
உள்ளே வந்த விசே முதலில் பிரவீன் காந்தியிடம் ஒரண்டை இழுத்தார். “உங்களுக்கு என்னை பிடிக்குமா, பிடிக்காதா.. வெளில நீங்க பேசின வீடியோ பார்த்தேன்” என்று விசே, சங்கடமான சிரிப்புடன் “பிடிக்கும் சார்” என்றார் டைரக்டர். ‘விஜய்சேதுபதி எங்களை பேசவே விட மாட்டார்’ என்பது முதல் பல விஷயங்களை பிரவீன் காந்தி நேர்காணல்களில் சொல்லியிருந்தார் போல.
எஃப்ஜேவும் கானா வினோத்தும் இதே விஷயத்தை வீட்டிற்குள்ளேயே சொன்னார்கள். ‘அவர் கிட்ட என்ன விளக்கம் தர்றது. உக்காருன்னுவாரு.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 97

