இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஜேர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மொ்ஸும் இணைந்து அனுமன் உருவப்படம் பொறித்த பட்டத்தை பறக்கவிட்டு மகிழ்ந்தனர்.
இந்தியாவின், குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் சா்வதேச பட்டத் திருவிழாவை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஜேர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மொ்ஸும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
மகர சங்கராந்தியை முன்னிட்டு சபரிமதி ஆற்றங்கரையில் மூன்று நாள்கள் நடைபெறும் சா்வதேச பட்டத் திருவிழா இன்று திங்கட்கிழமை (12) காலை ஆரம்பமானது.
இந்த திருவிழாவை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஜேர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மொ்ஸும் இணைந்து அனுமன் உருவப்படம் பொறித்த பட்டத்தை பறக்கவிட்டு ஆரம்பித்து வைத்தனர்.
இந்த விழாவில், 50 நாடுகளைச் சேர்ந்த 135 சர்வதேசப் பட்டம் விடும் ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுடன், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 65 பேரும், குஜராத்தைச் சேர்ந்த 871 உள்ளூர் பங்கேற்பாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜேர்மனி பிரதமர் ஃப்ரீட்ரிக் மொ்ஸை சபா்மதி ஆசிரமத்தில் இன்றையதினம் காலை பிரதமர் மோடி வரவேற்றார்.
இருவரும் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்திய பின்னர், அங்குள்ள பார்வையாளர்கள் கையேட்டில் கையொப்பமிட்டனர்.
p>


