அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதியாக (Acting President of Venezuela) அறிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அமெரிக்க இராணுவத்தால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு நியூயார்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில், விக்கிபீடியா பக்கத்தைப் போன்ற ஒரு திருத்தப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ட்ரம்ப், அதில் தன்னை அமெரிக்காவின் 45-வது மற்றும் 47-வது ஜனாதிபதி என்றும், தற்போது வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னணி என்ன? இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் மதுரோ கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து வெனிசுலாவின் உச்ச நீதிமன்றம் அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸை இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்தது. இருப்பினும், “வெனிசுலாவை நாங்களே நடத்துவோம்” என்றும், அந்நாட்டின் எண்ணெய் வளங்களை முறைப்படுத்துவோம் என்றும் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். தற்போதைய ட்ரம்ப்பின் இந்தப் பதிவு, வெனிசுலாவின் இறையாண்மை மற்றும் அதன் எண்ணெய் வளம் மீதான அமெரிக்காவின் பிடியை உறுதிப்படுத்துவதற்கான ஒரு சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply