ரஷ்யா – உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா வழங்கிய எஃப்-16 போர் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது. ரஷ்யா அமெரிக்கா இடையே இதுவரை வார்த்தைப் போர் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில், போர் விமானத்தைச் சுட்டி வீழ்த்தியுள்ள இந்த சம்பவம் உக்ரைனுக்கும், அதற்கு ஆதரவளித்து வரும் மேற்கத்திய நாடுகளுக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் அதிநவீன எஸ்-300 வான் வழி பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி அமெரிக்காவின் இந்த போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
நேட்டோ மற்றும் டான்பாஸ் பகுதிகளை காரணம் காட்டி உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ராணுவம் கடந்த 2022 பெப்ரவரி மாதத்தில் போரை தொடங்கிய நிலையில், 3 ஆண்டுகள் முடிந்து 4ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள போதிலும், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உக்ரைன் மீது உடனான ரஷ்யாவின் போரால் உக்ரைன் நாட்டில் இருந்து சுமார் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர். இதனால் அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் உதவியுடன் உக்ரைன் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் முதல் எஃப்-16 போர் விமானங்களை பயன்படுத்த தொடங்கியது.
ஐரோப்பிய நாடுகள் மொத்தமாக 87 எஃப்-16 விமானங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இதுவரை 44 விமானங்கள் மட்டுமே உக்ரைனுக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா வழங்கிய எஃப்-16 போர் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.

