பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ‘பராசக்தி’. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம், அவரது இசை வாழ்க்கையின் 100வது படமாகவும் அமைந்துள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம், இதுவரை மூன்று நாட்களில் உலகளவில் சுமார் ரூ.55 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் இரண்டு நாட்களில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மூன்றாவது நாளில் வசூல் சற்று குறைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வரும் நாட்களில் படத்தின் வசூல் மீண்டும் அதிகரிக்கும் என திரைப்பட வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. தொடர்ந்து ‘பராசக்தி’ எந்த அளவிற்கு வசூல் சாதனை படைக்கும் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

