உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் தைப்பொங்கலுக்கான வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளன.
உழவுத்தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் இந்த விழாவை முன்னிட்டு, மக்கள் அதிகாலை முதலே சந்தைகளுக்கு வந்து தேவையான பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
சூரியன் உதயமாகும் நேரத்தில் வீடுகளின் வாசலில் பொங்கலிட்டு வழிபாடு மேற்கொள்ளும் பாரம்பரியத்தின் காரணமாக, புதுப்பானை, கரும்பு, மஞ்சள் இலை, பழங்கள் உள்ளிட்ட பொங்கல் பொருட்களுக்கு அதிக தேவை காணப்படுகிறது. இதனால் திருநெல்வேலி சந்தை உட்பட யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் வியாபாரம் களை கட்டியுள்ளதுடன், மக்கள் வருகையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
தைப்பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடுவதற்காக தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
p>

