ஈரானில்,அரசுக்கு எதிராக வெடித்துள்ள கலகங்கள் உச்சக் கட்டத்தை தொட்டுள்ளதால், சர்வதேசத்தின் பார்வை தலைநகர் தெஹ்ரானின் பதில் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து நிற்கின்றன.

கடந்த டிசம்பர் 28ஆம் திகதி குர்திஷ் மாகாணங்களில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டங்கள், தற்போது தலைநகர் தெஹ்ரானுக்குள் நுழையுமளவுக்கு தீவிரமடைந்துவிட்டன.

பொருளாதார பாதிப்புக்களை காரணங்காட்டி இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும், ஏகாதிபத்தியவாதிகளின் சதி வேலைகளென இதனை ஈரான் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமய்னி வர்ணித்துள்ளார்.

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்ட மன்னர் ஷாவின் மகன், இந்த ஆர்ப்பாட்டங்களை இயக்குவதாக ஈரான் நம்புகிறது.

சர்வதேசத்தின் நீண்டகால பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் நிமிர்ந்து வரும் ஈரானை, அடியோடு அழித்துவிட கை்ககூலிகள் ஏவிவிடப்பட்டுள்ளதாக வும் அவர் ஆர்ப்பாட்டக்காரர்களை விமர்சித்துள்ளார்.

இதற்கிடையில், அமைதியாகப் போராடும் அதிருப்தியாளர்களை ஆயுதங்களால் அடக்கினால், ஈரான் கடுமையாகத் தண்டிக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தலைநகர் தெஹ்ரானுக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் புனித அல்குர்ஆன் பிரதிகளை எரித்ததுடன், அரச சொத்துக்களையும் சேதப்படுத்தி,இணையத் தள தலைமையகத்தையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

இதனால்,தொடர்பாடல்கள் சகலதும் துண்டிக்கப்பட்டுள்ளன. ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுமானால்,பதிலுக்கு இஸ்ரேல் தாக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது.

இதனால்,இஸ்ரேலிலுள்ள ரஷ்யர்கள் சகலரும் வௌியேறியுள்ளதாகவும் சர்வதேக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறுள்ள நிலையில்,கிரீன்லாந்து மெக்சிகோ மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் மீது அதிரடியாகப் பாய்வதற்கு அமெரிக்கா திட்டம் தீட்டியுமுள்ளது.

முதற்கட்டமாக கிரீன்லாந்தை கைப்பற்றும் திட்டம் களமிறக்கப்படலாம். அத்தீவிலுள்ள அமெரிக்காவின் பியூட்டிஃபில்ஸ் விண்வௌித்தளத்தை ரஷ்ய மற்றும் சீன கப்பல்கள் உளவு பார்ப்பதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது.

தற்போது தென்னாபிரிக்காவின் கடற்படைத்தளமாக சிமன்டௌன்ஸ் பகுதியில் ரஷ்யா,சீனா மற்றும் ஈரானின் கப்பல்கள் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

Share.
Leave A Reply