மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி கார்த்திக் என்பவர் முதல் இடத்தை பிடித்த நிலையில், காரை பரிசாக வென்றார்.

காணும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டு இன்று (ஜனவரி 17) நடைபெற்றது.

போட்டி காலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், அமைச்சர் மூர்த்தி தலைமையில் தொடங்கிய நிலையில், 11 சுற்றுகளாக மாலை 6.30 மணி வரை போட்டி நடைபெற்று முடிந்தது.
Add Zee News as a Preferred Source

இதனிடையே காலை 11:30 மணி அளவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் நேரில் பார்வையிட்டு சிறப்பாக களமாடிய காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க மோதிரம் மற்றும் தங்க நாணயங்களை பரிசாக வழங்கினார்.

இந்த போட்டியில் 1002 காளைகளும், 497 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியில் வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்து மாடுபிடி வீரர்களை சிதறிடித்து காளைகளே அதிகளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்று பரிசுகளை அள்ளி சென்றது.

முதல் பரிசை வென்ற கார்த்திக்

இந்த போட்டியின் முடிவில் 19 காளைகளை அடக்கிய கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்தி என்ற மாடுபிடி வீரர் வென்றார். அவருக்கு ஹீண்டாய் அல்சஜர் காரும், அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கை சார்பாக கன்றுடன் கூடிய கறவை பசு மற்றும் கிங் ஐஏஎஸ் அகாடமி சார்பில் 3 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

17 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தை பிடித்த சிவகங்கை மாவட்டம் பூவந்தி அபிசித்தருக்கு பைக் பரிசும், கிங் ஐஏஎஸ் அகாடமி சார்பில் 2 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. 11 காளைகளை பிடித்த மதுரை பாசிங்காபுரம் ஸ்ரீதருக்கு இ – பைக்கும் மற்றும் கிங் ஐஏஎஸ் அகாடமி சார்பில் 1 லட்சத்திற்கான காசோலையும் பரிசாக வழங்கப்பட்டது.

காளை உரிமையாளர்களுக்கு பரிசு

இதேபோன்று களத்தில் சிறப்பாக விளையாடிய புதுக்கோட்டை AVM பாபு என்ற காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கை சார்பாக கன்றுடன் கூடிய கறவை பசுவும் வழங்கப்பட்டது.,

இரண்டாவது காளைக்கு புதுக்கோட்டை தமிழ்செல்வன் காளைக்கு பைக் பரிசும் வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசாக மதுரை கென்னடி என்ற காளையின் உரிமையாளருக்கு இ- பைக் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், போட்டியில் கலந்துகொண்ட அனைத்து காளைக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் சிறப்பாக காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு தங்க நாணயம், பீரோ, கட்டில், டிவி, சைக்கிள், பணம், சேர், உள்ளிட்ட ஏராளமான பரிசுபொருட்கள் வழங்கப்பட்டது.

48 பேர் காயம்

போட்டியின்போது, மாடு குத்தியதில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் காவல்துறையினர் என 48 பேர் காயமடைந்தனர்.்இதில் 19 பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Share.
Leave A Reply