விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் வியானா.

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் மிகவும் அமைதியாக விளையாடிய வியானாவின் க்யூட்டான பேச்சு மற்றும் அழகுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

வியானா கொஞ்சி கொஞ்சி பேசுவதை பார்த்து இவர், வேறு மாநிலத்தை சேர்ந்த பெண் என அனைவரும் நினைத்து இருந்தார்கள்.

ஆனால், வியானா தமிழ் நாட்டில் அதுவும் திண்டிவனத்தில் தான் பிறந்துள்ளார். தாய் மொழி உருது என்பதால், வியானா தமிழ் பேசுவது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.

மாடலிங் துறைக்கு வந்த இவர், தன்னுடைய பெயரை மாற்றி வியானா என வைத்துள்ளார். இவரின் உண்மையான ரஷீதா பானு.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வியானா வெளியேறினாலும், தனது அழகால் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார்.

