பெர்ன்: அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே மோதல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தான் சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில், ஐரோப்பியர்களை முட்டாள் என்று டொனால்ட் டிரம்ப் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதோடு இந்த பேச்சு அமெரிக்கா – ஐரோப்பியா இடையேயான மோதலை அதிகரித்துள்ள நிலையில் டொனால்ட் டிரம்பின் இந்த கோபத்தின் பின்னணி பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

சுவிட்சர்லாந்தின் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் தனது நெருங்கிய கூட்டாளிகளாக இருக்கும் ஐரோப்பிய நாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

” ‛முட்டாள்’ என்ற வார்த்தைகளை பயன்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இடையேயான மோதல் என்பது உச்சமடைந்துள்ளது.

இந்த மாநாட்டில் டொனால்ட் டிரம்ப், ‛‛இங்கு நிறைய நண்பர்கள் மற்றும் நிறைய எதிரிகள் இங்கு உள்ளனர்” என்று தனது பேச்சை தொடர்ந்தார். இதை கேட்டவுடன் அங்கிருந்தவர்கள் சிரித்துவிட்டனர்.

அதன்பிறகு னால்ட் டிரம்ப் ஐரோப்பா மீது கொந்தளித்து பேசியதாவது: அமெரிக்கா என்பது இந்த உலகத்தின் பொருளாதார இயந்திரம். அமெரிக்கா வளர்ந்தால் மொத்த உலகமும் வளரும். இதுதான் வரலாறாக உள்ளது.

ஐரோப்பாவின் சில பகுதிகள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி உள்ளன. ஐரோப்பிய மக்கள் மீது அமெரிக்காவுக்கு எப்போதும் அக்கறை உண்டு. ஆனால் ஐரோப்பா தங்களை தானே அழித்து கொள்கிறது.

ஐரோப்பா இப்போது பலவீனமான கண்டமாக உள்ளது. அமெரிக்கா மீண்டும் ஐரோப்பாவை வலிமையானதாக பார்க்க விரும்புகிறது.

என்னை பொறுத்தவரை எரிசக்தி ஆதாரமாக காற்றாலை இருப்பது பிடிக்கவில்லை. சீனா தான் அனைத்து காற்றாலைகளையும் உருவாக்குகிறது.

ஆனால் அங்கே நான் எதையும் பார்க்கவில்லை. அவர்கள் அதை ஐரோப்பாவில் உள்ள முட்டாள் மக்களுக்கு விற்று பெரும் செல்வம் ஈட்டுகிறார்கள்” என்றார்.

அதாவது அமெரிக்காவும், சீனாவும் எதிரிகளான உள்ளன. அதேவேளையில் ஐரோப்பாய நாடுகள் அமெரிக்காவுடன் நல்ல நட்பில் உள்ளன.

” இப்படியான சூழலில் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சீன நிறுவனங்களின் காற்றாலை மின் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது ஐரோப்பாவில், சீனாவின் ஆதிக்கத்தை உணர்த்தும் வகையில் உள்ளது.

இதனால் டிரம்ப் கோபமாகி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதோடு, டென்மார்க் நாட்டின் கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற துடிக்கிறது. அதற்கு டென்மார்க் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த விஷயத்தில் பிரிட்டன், பிரான்ஸ் உள்பட ஐரோப்பிய நாடுகள் பலவும் டென்மார்க்கிற்கு ஆதரவாகவும், டிரம்பிற்கு எதிராகவும் உள்ளன.

இதனால் டொனால்ட் டிரம்ப் கடும் கோபத்தில் உள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளை உலக பொருளாதார மாநாட்டில் கடுமையாக திட்டி தீர்த்துள்ளார்.

இந்த மாநாட்டில் கிரீன்லாந்து பற்றி டொனால்ட் டிரம்ப் பேசினார். இதுபற்றி டொனால்ட் டிரம்ப் பேசுகையில், ‛‛கிரீன்லாந்து பாதுகாக்க அமெரிக்காவால் மட்டுமே முடியும். நாங்கள் பெரிய சக்தியாக இருக்கிறோம். மக்கள் நினைப்பதை விட எங்களின் சக்தி பெரிதாக உள்ளது.

ஆனால் கிரீன்லாந்தை கைப்பற்ற படைகளை அமெரிக்கா பயன்படுத்தாது. ” கிரீன்லாந்தை பிடிக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். கிரீன்லாந்து அமெரிக்கா வசம் வருவது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரு தரப்பினரின் நலன்களுக்கும் உகந்ததாக இருக்கும். கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடு நேட்டோ கூட்டணியை இன்னும் வலுப்படுத்தும்” என்றார்.

Share.
Leave A Reply