யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் வியாழக்கிழமை (22) காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளர், சக உத்தியோகத்தர் மற்றும் மற்றைய மோட்டார் சைக்கிளில் ஓட்டியான பிறிதொரு நபருமாக மூவர் படுகாயமடைதுள்ளதுடன் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply