2025ம் ஆண்டில் 114 துப்பாக்கி சூட்டு சம்பவங் கள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ள தாக பொலிஸ் ஊடக பேச்சாளர் எப்.யூ.வுட் லர் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டில் அதி களவான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மற்றும் உயிரி ழப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த இரு ஆண்டு களை விடவும் அதிகமாகும். 114 துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 60 பேர் உயிரிழந்ததுடன் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவங்களில் 73 சதவீதத்திற்கும் அதிகமா னவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போட்டிகளுடன் தொடர் புடையவை. 2024 ஆம் ஆண்டில் 25 ரி56 துப்பாக் கிகள் மீட்கப்பட்டுள்ளன.
2025ம் ஆண்டில் 75 துப்பாக்கிகளும், 88 கைத் துப்பாக்கிகளும் மீட்கப்பட் டுள்ளன. ஜனவரி 2026 இல் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந் துள்ளன,
இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு குழந்தைகள் உட் பட நான்கு பேர் காயமடைந் தனர் எனவும் கூறியுள்ளார்.

