– பத்ம விருதுகள்| தமிழர்கள் 5 பேருக்கு பத்மஸ்ரீ விருது! யார் யார்?
நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷண், மாதவனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட நடிகர் மாதவன் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பில் 131 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் 13 பேருக்கு பத்ம பூஷண், 5 பேருக்கு பத்ம விபூஷண், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படவுள்ளன.
கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம், சமூகநலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டவா்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டில், கலைத் துறையில் இருந்து பத்ம விருதுகள் பட்டியலில் இடம்பெற்றவர்கள்.
பத்ம பூஷண்
மம்மூட்டி – கேரளம்
அல்கா யாக்னிக் – மகாராஷ்டிரம்
பியூஷ் பாண்டே – மகாராஷ்டிரம்
ஆர். கணேஷ் – கர்நாடகம்
பத்ம விபூஷண்
தர்மேந்திர சிங் தியோல் – மகாராஷ்டிரம்
என். ராஜம் – உத்தரப் பிரதேசம்
பத்ம விருதுகள்| தமிழர்கள் 5 பேருக்கு பத்மஸ்ரீ விருது! யார் யார்?
மூத்த விஞ்ஞானி புண்ணியமூர்த்தி, ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் உட்பட சேலம், திருவாரூர், நீலகிரியைச் சேர்ந்த 5 தமிழகர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
2026 குடியரசு தினத்தை முன்னிட்டு 5 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது..
Remaining Time -9:34
Unibots.com
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பத்ம விருதுகள், ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தையொட்டி மத்திய அரசால் அறிவிக்கப்படும். அவை, பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.
கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
பத்ம விருதுகள்
பத்ம விருதுகள்
அந்த வகையில் 2026 குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதில்
1.மூத்த விஞ்ஞானி புண்ணியமூர்த்தி,
2.ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன்,
3.நீலகிரியைச் சேர்ந்த ஓவியர் ஆர்.கிருஷ்ணன்,
4.சேலத்தை சேர்ந்த சிற்ப கலைஞர் காலியப்ப கவுண்டர்,
5.திருவாரூரைச் சேர்ந்த மிருதங்க கலைஞர் பக்தவச்சலம்
முதலியோருக்கு பத்மஸ்ரீ விருது இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

