மதுரை மேலூர் அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் பின்புறம் மற்றொரு பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி புறநகர்ப் பகுதியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் உதவியுடன் விபத்தில் சிக்கிய பயணிகள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் பேருந்தில் கனக ரஞ்சிதம் (65), சுதர்சன் ( 23), மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு பெண் பயணி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் உதவினர். அத்துடன், விபத்து குறித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

