– அந்த ஆயுதம் வெனிசுவேலாவின்  அனைத்து  சாதனங்களையும்  வேலை செய்யாமல் செய்ததாக அவர் கூறினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நிக்கோலாஸ் மதுரோவை அமெரிக்கா பிடித்த போது, வெனிசுவேலாவின்  அனைத்து சாதனங்களையும்   செயலிழக்கச் செய்ய “தி டிஸ்கொம்போபுலேட்டர் ( ” “The Discombobulator)  என்று அவர் கூறிய ஒரு ரகசிய ஆயுதத்தை பயன்படுத்தியதாக தெரிவித்தார்.

மேலும்,  போதை மருந்து கடத்தல் கும்பல்கள் எதிராக தரையில் நேரடியாக ராணுவ தாக்குதல் நடத்துவோம் என்ற மிரட்டலை அவர் மீண்டும் கூறினார். இதில் மெக்சிகோவும் சேரலாம் என்றார்.

வெள்ளிக்கிழமை நியூயார்க் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் இதை கூறினார்.

அமெரிக்காவிடம் ஒரு “பல்ஸ் எரிசக்தி ஆயுதம்” (pulsed energy weapon) உள்ளது என்ற தகவல்களுக்கு பதிலளித்த டிரம்ப், “அது டிஸ்கொம்போபுலேட்டர். அதைப் பற்றி பேச எனக்கு அனுமதி இல்லை” என்றார்.

அந்த ஆயுதம் வெனிசுவேலாவின் உபகரணங்கள் வேலை செய்யாமல் செய்ததாக அவர் கூறினார்.

“அவர்கள் ஒரு ராக்கெட்டையும் ஏவ முடியவில்லை. அவர்களிடம் ரஷ்யா, சீனாவின் ராக்கெட்டுகள் இருந்தன.

நாங்கள் உள்ளே நுழைந்தோம். அவர்கள் பொத்தான்களை அழுத்தினார்கள், ஆனால் எதுவும் வேலை செய்யவில்லை. எல்லாம் தயார் நிலையில் இருந்தது” என்று டிரம்ப் கூறினார்.

முன்னதாக, மதுரோவின் வளாகத்தில் நடந்த தாக்குதலை விவரிக்கும் போது,
“கராக்காஸ் நகரத்தின் பெரும்பாலான மின்விளக்குகளை நாங்கள் அணைத்தோம்” என்று டிரம்ப் சொன்னார். ஆனால் அது எப்படி நடந்தது என்று அவர் விளக்கவில்லை.

மேலும், போதை மருந்து கடத்தல் கும்பல்கள் எதிரான ராணுவ தாக்குதல்கள் தொடரும் என்றும், தென் அமெரிக்காவிலிருந்து வட அமெரிக்காவிற்கும் அதை விரிவுபடுத்தலாம் என்றும் டிரம்ப் கூறினார்.

“அவர்களின் பாதைகள் எங்களுக்குத் தெரியும். அவர்கள் எங்கு இருக்கிறார்கள், அவர்களின் வீடுகள் அனைத்தும் எங்களுக்குத் தெரியும். நாங்கள்  போதை மருந்து கடத்தல் கும்பல்களை தாக்கப் போகிறோம்” என்றார்.

இந்த தாக்குதல்கள் மத்திய அமெரிக்கா அல்லது மெக்சிகோவில் நடக்குமா என்று கேட்டபோது,
“எங்கும் நடக்கலாம்” என்று டிரம்ப் பதிலளித்தார்.

வெள்ளிக்கிழமை, கிழக்கு பசிபிக் கடலில் போதைப்பொருள் கடத்தல் செய்ததாக கூறப்படும் ஒரு படகை அமெரிக்கா தாக்கியது. மதுரோ பிடிபட்ட பிறகு நடந்த முதல் தாக்குதல் இதுவாகும்.

செப்டம்பர் தொடக்கத்திலிருந்து கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் நடந்த குறைந்தது 36 தாக்குதல்களில், குறைந்தது 117 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வெனிசுவேலாவுடன் தொடர்புடைய ஏழு எண்ணெய் டாங்கர்களை அமெரிக்கா கைப்பற்றி, அதில் இருந்த எண்ணெயை அகற்றியதாக டிரம்ப் கூறினார். ஆனால் அந்த கப்பல்கள் இப்போது எங்கு உள்ளன என்பதை அவர் சொல்லவில்லை.

“அதை சொல்ல எனக்கு அனுமதி இல்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன், அவர்களிடம் இப்போது எண்ணெய் இல்லை. நாங்கள் எண்ணெயை எடுத்துக் கொள்கிறோம்” என்றார்.

பேட்டியில், வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ பெற்ற நோபல் அமைதி பரிசை அவர் இன்னும் எங்கு தொங்க வைப்பது என்று யோசித்து வருவதாகவும் டிரம்ப் கூறினார்.

அந்த பரிசை அவர் இந்த மாதம் டிரம்ப்க்கு கொடுத்தார். அது தற்போது ஓவல் ஆபீஸில் உள்ள ஒரு சிலைக்கு அருகில் சாய்ந்து வைத்திருக்கப்படுகிறது.

NATO chief Mark Rutte

மேலும், நேட்டோ தலைவர் மார்க் ருட்டேவுடன் செய்த ஆர்க்டிக் பாதுகாப்பு ஒப்பந்தம், அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள நிலங்கள் அமெரிக்காவுக்கே சொந்தமாகும் வகையில் இருக்கும் என்றும் டிரம்ப் கூறினார்.

“எங்களுக்கு வேண்டிய அனைத்தும் கிடைக்கும். சில சுவாரஸ்யமான பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன” என்றார்.

ஆனால் இந்த ஒப்பந்தம் குறித்து பல விஷயங்கள் இன்னும் தெளிவாக இல்லை. டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள், கிரீன்லாந்தின் இறையாண்மை  பற்றிப் பேசிப் பேசி மாற்ற முடியாதது என்று தெரிவித்துள்ளனர்.

நேட்டோ பேச்சாளர் ஒருவரும், ருட்டே எந்த இறையாண்மை சமரசத்தையும் முன்வைக்கவில்லை என்று கூறினார்.

the Super Bowl

டிரம்ப், இந்த ஆண்டு சூப்பர் போவல் (the Super Bowl -American Football:  ) போட்டிக்கு செல்லமாட்டேன் என்றும், அந்த நிகழ்ச்சியில் பேட் பன்னி மற்றும் கிரீன் டே பாடுவது “மோசமான தேர்வு” என்றும் கூறினார். கடந்த ஆண்டு அவர் நியூ ஆர்லீன்ஸில் நடந்த சூப்பர் போவலை ( the Super Bow)l நேரில் பார்த்திருந்தார்.

Share.
Leave A Reply