இலங்கையைச் சேர்ந்த ஒரு புத்தமத கோவிலின் தலைமை பிக்குவால் தன் மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறியதை நினைத்து ஒரு தாய் அழுதபடி நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார். Australia உள்ள புத்தமத கோவில் ஒன்றில் இச்சம்பவங்கள் நடந்துள்ளன.
அந்த பெண் குழந்தை, ஒன்பது வயதிலிருந்தே தன்னை அந்த பிக்குவர் துன்புறுத்தியதாக கூறுகிறார். ஆனால், யாரும் நம்ப மாட்டார்கள் என்ற பயத்தால், பெரியவளான பிறகே இதைப் பற்றி பேசினார் என்று அந்த தாய் கூறினார்.
“விஜித சாதூ என் உடலைத் தொட்டார், என் உதடுகளை முத்தமிட்டார். அதற்கு முன் அவள் ஒருபோதும் முத்தம் பெற்றதே இல்லை” என்று அவர் கண்ணீருடன் Victoria’s County Court,- Australia நீதிமன்றத்தில் கூறினார்.
“அதை கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில் அவரை நான் மிகவும் நம்பினேன்” என்றும் அவர் சொன்னார்.
70 வயதான வண. நவோத்துன்னே விஜித மீது, 1990-களின் நடுப்பகுதியில் இருந்து நடந்ததாக கூறப்படும் 19 குழந்தை பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மெல்போர்னின *Melbourne, Australie) தென்கிழக்கில் உள்ள கீஸ்பரோவில் Keysborough உள்ள தம்ம சரணா கோவிலின் தலைமை பிக்குவான அவர், அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். தற்போது, ஜூரி விசாரணையின் இரண்டாவது வாரம் நடைபெற்று வருகிறது.
1994 முதல் 2002 வரை, 4 முதல் 12 வயதுக்குட்பட்ட ஆறு குழந்தைகளை அவர் பாலியல் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் கீஸ்பரோ கோவில், முன்பு இருந்த ஸ்பிரிங்வேல் கோவில், அவரது தங்கும் அறை, பிரார்த்தனை அறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் நடந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
இப்போது பெரியவர்களாக உள்ள அந்த ஆறு பேரின் குடும்பத்தினர்கள் (இரண்டு தாய்மார்கள் மற்றும் கணவர்கள்) வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சாட்சி அளித்தனர். சட்டப்படி அவர்களின் பெயர்கள் வெளியிட முடியாது.
மற்றொரு தாய், தன் மகள் எட்டு அல்லது ஒன்பது வயதில், கீஸ்பரோ கோவிலில் இருமுறை துன்புறுத்தப்பட்டதாக கூறினார். அந்த அனுபவத்துக்குப் பிறகு, அவள் அணிந்திருந்த உடையை கத்தரிக்கோலால் வெட்டியதாக தாய் தெரிவித்தார்.
அந்த பெண், 2022-ல் போலீசாரிடம் பேசிவிட்டுப் பிறகு, பெரியவளான நிலையில் தான் இதைப் பற்றி தன்னிடம் சொன்னதாக அந்த தாய் கூறினார்.
அன்று, கோவிலில் நடந்த ஒரு விழாவுக்காக தாய் மற்றும் தந்தை சமையலறையில் உணவு தயாரித்து கொண்டிருந்தபோது, விஜித அந்த குழந்தையை தன் அறைக்குக் கூட்டிச் சென்று துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
“எவ்வளவு நேரம் என்று தெரியாது, ஆனால் அவள் சிறிது நேரம் காணாமல் போயிருந்தாள்” என்று தாய் கூறினார்.
திரும்பி வந்தபோது, விஜித தன்னுக்கு மிட்டாய் தருவதாக சொன்னதாகவும், ஆனால் அவருடன் மீண்டும் செல்ல விரும்பவில்லை என்றும் குழந்தை கூறியதாகத் தாய் சொன்னார்.
பின்னர், விஜித தாயிடம் வந்து, ஒரு பொம்மை இருக்கிறது என்று கூறி குழந்தையை மீண்டும் அனுப்ப வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
குழந்தை மீண்டும் அவரது அறைக்குச் சென்றபோது, அங்கு மீண்டும் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாகவும், வெளியே வரும் போது அவர் யானை வடிவ சாவித்தொகுப்பு ஒன்றை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
“விரைவாக, விரைவாக… வீட்டுக்கு போகணும்” என்று அவள் சொன்னதாக தாய் தெரிவித்தார்.
கோவிலை விட்டு காரில் செல்லும்போது, அந்த சாவித்தொகுப்பை காருக்கு வெளியே எறிந்துவிட்டு, “எனக்கு இது ஒன்றுமே பிடிக்கவில்லை” என்று குழந்தை கூறியதாக நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது.
அந்த கோவிலில் விஜித மற்றும் மற்றொரு பிக்குவர் முழுநேரமாக வசித்து வந்ததாகவும், சில சமயம் இலங்கையிலிருந்து வந்த பிக்குவர்களும் அங்கு தங்குவார்கள் என்றும் சாட்சிகள் தெரிவித்தனர்.

