யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனான அயூப்ராஜ் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அதற்கு நீதி வேண்டியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப் பட்டது. அல்லைப்பிட்டி படுகொலை அருள்பாயஸ்ஸூக்கு நீதி வேண்டி யாழ்ப் பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று கவ னயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக் கப்பட்டது.
குறித்த சிறுவன் கடந்த 10 ஆம் திகதி அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து ஊர்காவற்துறை பொலிசாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.அதற்கு நீதி வேண்டியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப் பட்டது.
மனித உரிமைகள் ஆர்வலர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தவத்திரு வேலன் சுவாமிகள், குரல் அற்றவர் களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் முருகையா கோமகன், யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், கொலை செய்யப்பட்ட சிறுவனின் உறவினர்கள், காணாமல் ஆக் கப்பட்டோரது சங்கத்தினர்,மனித உரிமை ஆர் வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந் தியவாறு, கொலைகார பொலிஸாரை கைது செய், நீதி வேண்டும், பொலிஸாரிடமிருந்து மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும், பாதிக்கப் பட்ட குடும்பத்தை அச் சுறுத்தாதே, பொலிஸ் அராஜகம் ஒழிக கோஷமிட்டவாறு போராட்டத் தில் ஈடுபட்டனர்.

