சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் உடனான திருமண பதிவை ரத்து செய்யுமாறு அவரது மனைவி சங்கீதா, கடந்த டிசம்பர் மாதத்தில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

இந்த மனு வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இப்படி இருக்கும் போது, நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதில் சில ரசிகைகள் தெரிவித்துள்ள ஆதரவு கருத்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. விஜய்யின் மனைவி சங்கீதா தனது விவாகரத்து மனுவில், ” எனது கணவர் விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார்.

இவர் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்பதை நான் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே கண்டுபிடித்துவிட்டேன். அப்படி கண்டுபிடித்த பின்னர் விஜய் அந்த உறவை துண்டிப்பதாக என்னிடத்தில் கூறினார். ஆனால் அவர் அந்த உறவை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார்.

!இதை எல்லாம் கேள்வி கேட்ட எனக்கு எனது வீட்டிற்குள்ளேயே அடிப்படையான உரிமைகள் முதற்கொண்டு மறுக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வீட்டில் தனித்தனியாக இருந்தோம்.

நடிகையுடன் அவர் வெளிநாடுகளுக்கு ஒன்றாக செல்வதும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒன்றாக செல்வதுமாக இருக்கிறார்கள். அப்போது அவர்கள் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியில் பகிர்கிறார்கள்.

அவை எனக்கும் எனது குழந்தைகளுக்கும் மன சங்கடத்தையும் அவமானத்தையும் கொடுக்கிறது.

நடிகை பெயர்: விஜய்யுடனான திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பதுடன், விஜய்யின் வருமானம் மற்றும் சொத்துக்கு ஏற்ற வகையில் எனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்குக்கான செலவை விஜய்யே ஏற்க வேண்டும் என்றும், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை விஜய்யின் அதாவது தனது புகுந்த வீடான நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. மேலும் விஜய் தரப்பில் எனக்கு அழுத்தமோ, நெருக்கடியையோ கொடுத்தால் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையின் பெயரைச் சொல்லுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

Share.
Leave A Reply