சென்னை: விஜய்க்கும் பிரபல நடிகைக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சங்கீதா தனது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்தார். அவரது மனு குறித்த தகவல்கள் அப்பட்டமாக வெளியே கசிந்து மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

விஜய் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாதுகாப்பாக வெளிநாட்டில் வைத்துவிட்டு இங்கே அரசியலில் முழு மூச்சாக இறங்கியுள்ளார் என்றே விஜய் ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், சங்கீதாவின் விவாகரத்து மனு பலரது தலையில் இடியை இறக்கியது.

அப்போது கூட, இது உண்மையாக் இருக்காது என்றும் எல்லாம் திமுக சதி என சொல்லிக்கொண்டு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு விஜய் ஏஜிஎஸ் திருமண விழாவில் த்ரிஷாவுடன் பங்கேற்றது பாகுபலியை கட்டப்பா கத்தியால் குத்தியது போல ஆகிவிட்டது என மீம்ஸ் போட்டு புலம்பித் தள்ளுகின்றனர்.

நீலாங்கரை வீட்டின் மீது குறி: 1999ம் ஆண்டு நடிகர் விஜய்யை திருமணம் செய்துக் கொண்டு ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா என 2 குழந்தைகளை பெற்று வளர்த்து வந்த சங்கீதா விஜய் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரை விஜய்யுடன் துணையாக பல நிகழ்வுகளுக்கு வருகை தந்தார்.

பல வருடங்களாக நீலாங்கரை வீட்டில் தான் வசித்து வந்தார். சென்னையில் விஜய்க்கு நீலாங்கரை பங்களா, பனையூர் பங்களா மற்றும் பட்டினப்பாக்கத்தில் உள்ள சொகுசு அபார்ட்மெண்டில் வீடு என ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளன.

வடபழனியில் உள்ள சாலிகிராமத்தில் தான் ஆரம்பத்தில் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்த விஜய் நீலாங்கரையில் வீடு கட்டிய பின்னர் அங்கே சென்று பல வருடங்கள் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த நடிகை அங்கே தான் இருக்காரா?: தான் இத்தனை வருடங்களாக தனது கணவருடனும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நீலாங்கரை வீட்டிலேயே தனக்கு இடமின்றி விஜய் துரத்தி விட்டார் என்பது தான் சங்கீதாவின் வருத்தமாக உள்ளது.

அதன் காரணமாகவே வெளிநாட்டில் உள்ள அப்பாவின் வீட்டுக்குச் சென்று விட்டார் சங்கீதா என்றனர்.

இந்நிலையில், நீலாங்கரை வீட்டில் தான் அந்த நடிகை உள்ளாரா? சங்கீதா மீண்டும் ஒரு மனு அளித்து நீலாங்கரை வீட்டில் தங்க வைக்க வேண்டும் என வலியுறுத்த அதுதான் காரணமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

அந்த வீட்டில் இருந்து நடிகையை துரத்தவே சங்கீதா விரும்புகிறாரா? கண்டிப்பாக மிக விரைவில் சங்கீதா பத்திரிகையாளர் சந்திப்பு அல்லது அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share.
Leave A Reply