கூகுள் (Google) நிறுவனம் அவ்வப்போது புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது.

குறிப்பாக இந்நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் (Google CEO Sundar Pichai) சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது கடந்த 2024-ம் ஆண்டு நிலவரப்படி சுந்தர் பிச்சையின் சம்பளம் வருடத்திற்கு 1,800 கோடி ரூபாயாக இருந்தது.

இந்நிலையில் சுந்தர் பிச்சையின் சம்பளம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சுந்தர் பிச்சையின் மூன்று ஆண்டு சம்பளம் 692 மில்லியன் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.63,61,79,82,000) உயர்த்தப்பட்டுள்ளது.

சுந்தர் பிச்சையின் சம்பள விவரங்கள் வெளியானது.. இவ்வளவு சம்பளமா?  எனவே இதன் மூலம் உலகில் அதிக சம்பளம் பெறும் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார் சுந்தர் பிச்சை.

மேலும் இவரின் ஊதியத் தொகுப்பில் 126 மில்லியன் டாலர் மதிப்புள்ள செயல்திறன் அடிப்படையிலான பங்குகள் மூலம் வருகிறது.

இந்த தொகை இரண்டு சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பங்குகள் ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்குதாரர் வருவாய், எஸ்&பி 100 புள்ளிகளுடன் ஒப்பிட்டு நிர்ணயிக்கப்படும்.

அதுவும் நிர்ணயிக்கப்பட்ட செயல்திறன் இலக்கை எட்டினால் இந்த PSUs–களின் மதிப்பு 252 மில்லியன் டாலராக இரட்டிப்பு அடையும்.

ஆனால் இலக்கு எட்டப்படாவிட்டால், எந்த வருமானமும் கிடைக்காமல் போகும். மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் பங்குகள் வாயிலாக 84 மில்லியன் டாலர்கள் மற்றும் ஆண்டுக்கு 2 மில்லியன் டாலர் சம்பளமும் சுந்தர் பிச்சைக்கு கிடைக்க உள்ளது.

இதுதவிர சில நிறுவனங்களில் உள்ள பங்கு தொகைகளும் சுந்தர் பிச்சைக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே சுந்தர் பிச்சையின் வருமான இன்னும் பல மடங்கு உயரும்.

சென்னை பள்ளிகளில் தனது ஆரம்பக் கல்வியை முடித்து, ஐஐடி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற சுந்தர் பிச்சை, அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் மற்றும் வார்ட்டன் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெற்றார்.

மேலும் ஆரம்பத்தில் மெக்கின்சி போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய இவர், 2004 இல் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார்.

கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த பிறகு குரோம், குரோம் ஓஎஸ், கூகுள் டிரைவ், ஆண்ட்ராய்டு இயங்குதளம் என கூகுளின் பல முக்கியத் தயாரிப்புகளின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார்.

இவரது திறமையைக் கண்டறிந்து 2015 ஆகஸ்டில் கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர் கூகுளை தோற்றுவித்த லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் ஆல்பாபெட் தலைவர் பொறுப்புகளில் இருந்து விலகியதைத் தொடர்ந்து,

கூகுள் மற்றும் ஆல்பாபெட் இரண்டிற்கும் தலைமை தாங்கும் பொறுப்பு சுந்தர் பிச்சையிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதேபோல் கூகுள் நிறுவனம் தற்போது பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது.

அதேபோல் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் கூகுள் ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களைத் தொட்டுவரும் நிலையில் சுந்தர் பிச்சையும் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக மாறி உள்ளார்.

மேலும் இந்த ஆண்டு கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share.
Leave A Reply