நடக்கவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் மருத்துவர் ராமதாஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

“தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவேண்டும், மக்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம்” என்று கூறிய ராமதாஸ், தங்கள் கூட்டணியில் இணைய விரும்புபவர்கள் தன்னிடமோ அல்லது சசிகலாவிடமோ அதுபற்றி விவாதிக்கலாம் என்று கூறினார்.

“தமிழகத்தின் துரோக அடையாளங்களை களைந்து மக்கள் நலனையும் தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சி மேம்படுத்தும் விதமாக இந்தக் கூட்டணி செயல்படும்” என்று அவர்களின் கூட்டணி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

Share.
Leave A Reply