“எல்ஐகே-ன் அடாவடி பாடலில் விக்னேஷ் சிவன் மகன்கள் உயிர், உலக் நடனமாடியது ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், ஸ்ரீலீலா, சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் எல்ஐகே.
முற்றிலும் ஏஐ, ரோபோ தொழில்நுட்ப விஷயங்களைக் கொண்டு கதையாக உருவான இப்படம் வருகிற ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதற்கான புரமோஷன்கள் துவங்கியுள்ள நிலையில், மூன்றாவது பாடலான அடாவடி வெளியாகியுள்ளது..
அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடலும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. சுவாரஸ்யமாக, பாடலில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இணையின் மகன்களான உயிர், உலக் இருவரும் நடனமாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இதனைக் கண்ட ரசிகர்கள் இருவரும் ஆடும் நடனத்தை மட்டும் கட் செய்து வைரலாக்கி வருகின்றனர். மார்ச் 31 அன்று வெளியான இப்பாடல் இதுவரை 50 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது..

