ilakkiyainfo

5 ஆயிரம் பேர் பலி… கொரோனாவின் அடுத்த இலக்காக மாறிவரும் பிரேசில் – அதிர்ச்சி தரும் தகவல்

5 ஆயிரம் பேர் பலி… கொரோனாவின் அடுத்த இலக்காக மாறிவரும் பிரேசில் – அதிர்ச்சி தரும் தகவல்
April 29
16:50 2020

போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் 31 லட்சத்து 35 ஆயிரத்து 557 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 19 லட்சத்து 64 ஆயிரத்து 866 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 307 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா வைரஸ் பரவியவர்களில் 9 லட்சத்து 52 ஆயிரத்து 942 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 17 ஆயிரத்து 749 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்த கொரோனா கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் கோரத்தாண்டம் ஆடிவருகிறது.

உலக அளவில் வைரஸ் பரவியவர்கள், பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஆனால், தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.

பிரேசில் நாட்டில் 72 ஆயிரத்து 899 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 63 ஆக அதிகரித்துள்ளது.

 

குறிப்பாக இந்த உயிரிழப்புகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரு மாத கால இடைவேளியில் நடந்துள்ளது.

போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும், வைரஸ் யாருக்கு பரவியிருக்கிறது என்ன கண்டறிய போதிய பரிசோதனை கருவிகள் இல்லாததாலும் வைரஸ் பாதிக்கப்பட்ட பலர் தங்கள் வீடுகளிலேயே உயிரிழந்துவரும் (2 வாரங்களில் 236 பேர்) கொடுமையான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இதனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து கொரோனாவுக்கு அடுத்த இலக்காக பிரேசில் நாடு மாறி வருகிறது.

இந்த நிலைமையின் தீவிரத்தன்மையை உணராத அந்நாடு அதிபர் ஜெயிர் போல்சனரோ கொரோனா வைரசை ‘சிறிய காய்ச்சல்’ என்றும் அதனால் நாட்டிற்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டாம் எனவும் தெரிவித்து வருகிறார்.

மேலும், மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்திய அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரியான லூயிஸ் ஹெண்டிக்யூ மண்டிட்டாவையும் அதிபர் போல்சனரோ கடந்த 18-ம் தேதி மந்திரி பதவியில் இருந்து நீக்கிவிட்டார்.

பிரேசிலில் தற்போது தட்பவெப்பநிலையாலும், போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தாலும் கொரோனாவின் அடுத்த இலக்காக மாறிவருகிறது.

குறிப்பாக வைரஸ் பரிசோதனை வசதிகள் இல்லாததால் பலர் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com