இன்று இரவு 9.00 மணியுடன் நிறைவடைந்த 13 மணி நேரத்தில் 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அந்த எண்ணிக்கை 620ஆக உயர்ந்தது.

 

இந் நிலையில்  இன்று இரவு 9.00 மணி வரையிலான காலப்பகுதியில் பதிவான தொற்றாளர்களில் 223 பேர் கடற்படை வீரர்களாவர் என  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந் நிலையில் இன்று 9.00 மணியுடன் நிறைவடைந்த 13 மணி நேரத்தில் மட்டும் மொத்தமாக 11 தொற்றாளர்கள் நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்ட நிலையில்,  அவர்களில் பெரும்பாலானோர் கடற்படை வீரர்களாவர்.

இன்று மட்டும் பாதிக்கப்பட்ட மேலும் இருவர்  பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு கூறியது.  அதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.

இந் நிலையில் மேலும் 484 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை  மற்றும் சிலாபம் – இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 250 ஆகும். அவர்கள்  நாடளாவிய ரீதியில் 32 வைத்தியசாலைகளில்  கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.