அடுத்த மாதம் இலங்கை உட்பட்ட நாடுகளின் பிரச்சினைகள் தொடர்பாக பேசப்படவுள்ள ஐக்கிய நாடுகளின் 27ஆவது மனித உரிமைகள் அமர்வு முடிவடையும் வேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார்.

அந்தவகையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமர்வில் பிரதான உரை நிகழ்த்தும் பட்டியலின்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இரண்டாவது நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேநாளில் பாகிஸ்தான், கனடா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் உரையாற்றவுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் ஆகியோர் அமர்வின் ஆரம்ப நாளான செப்டம்பர் 24 ஆம் திகதி உரையாற்றவுள்ளனர்.

இலங்கை உட்பட்ட நாடுகளின் பிரச்சினைகள் தொடர்பாக பேசப்படவுள்ள ஐக்கிய நாடுகளின் 27ஆவது மனித உரிமைகள் அமர்வு, செப்டம்பர் 8-26 ஆம் திகதி வரை நடைபெற்று முடிவடையும் வேளையில், ஐக்கிய நாடுகளின் பொது அமர்வு நடைபெறவுள்ளது.

Share.
Leave A Reply